Home Events
Events
E-mail Print PDF
Divine School - Silver Jubilee Celebrations - 2012

Meditation for +2 and 10th Students in Gnanapeedam

Click Here for Photos

11th Feb 2011
Gurumahan Jayanthi Blessings
 
GuruJayanthi-2012-4

15th Jan 2012
Pongal Celebrations
Gnanapeedam

Jan-2012-Pongal_Celebrations 

E-mail Print PDF
Dinamalar
15th June 2011 

கோலாலம்பூரில் ஆன்மிக பயிற்சி முகாம்

கோலாலம்பூர் : நபிகள் நாயகம் அன்பு சாம்ராஜ்யத்தையே விரும்பினார்; அமைதியான உலகையே படைக்க ஆசைப்பட்டார். ஆனால் இன்று இஸ்லாமிய நாடுகளில் அமைதி இல்லை; தனிநபர்கள் சர்வ அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு விட்டுக் கொடுக்கும் மனமின்றி கெட்டுப் போகின்ற சூழலைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பல இன, மொழி மக்கள் வாழும்போதும் நாம் அனைவரும் இந்த மண்ணின் புத்திரர்கள். நாம் அனைவரும் ஒன்று; ஒரே மலேசியர்(சத் மலேசியா). ஒன்றுபடுவோம், ஒன்றுநடுத்துவோம் என உலகிற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிற மலேசிய நாட்டில் இணை சிந்தனையை, இறை நம்பிக்கையை ஒன்றுபடுத்தி மனிதர்களை மாமனிதர்களாக உயர்த்த தெய்விகத்தை உருவாக்க, உலக அமைதி தின விழாவின் அங்கமாக வாழ்வியலக்காக ஒரு நாள் என்ற ஆன்மிகப் பயிற்சியை நடத்திய திருமூர்த்திமலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் மகரிஷி பரஞ்சோதியார் தமது அருளுரையில் குறிப்பிட்டார். கோலாலம்பூர் கம்போங் பாண்டான் சீனப் பள்ளி மண்டபத்தில் ஜூன் 12ம் தேதியன்று நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் மலேசியப் பிரதமர் துறை பொருளாதார விவகாரங்களுக்கான துணையமைச்சர் டத்தோ எஸ்.கே.தெய்வமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவருக்குப் பொன்னாடை போர்த்தி மகரிஷி கவுரவித்தார். மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்டோர் இப்பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.
முன்னதாக மகரிஷிக்குப் பூரண கும்ப வரவேற்பளிக்கப்பட்டு மங்கல மகளிர் அஷ்ட தீபம் ஏற்றிட குரு கீதத்துடன் முகாம் துவங்கியது. விழாவில் உரையாற்றிய அமைச்சர் டத்தோ தெய்வமணி, போராட்டம் நிறைந்த இவ்வுலகில் அமைதியை ஏற்படுத்த, நமக்குள்ளே இருக்கின்ற பஞ்ச பூதங்களை முறைப்படுத்தி உள்ளொளி பெருக்குகின்ற சூழலை உருவாக்கித் தர, மனித வாழ்க்கைக் கல்வியைக் கற்றுத் தர நடத்தப்படும் இம்முகாமில் தாம் கலந்து கொள்ளுவது மகிழ்ச்சியையும் மன நிறைவையும் ‌தருவதாகக் குறிப்பிட்டார். நாள் முழுவதும் பல்வேறு பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன. உலக சமாதான அறக்கட்டளைப் பொதுச் செயலர் கே.எஸ்.சுந்தரராமனும் பயிற்சிகளைச் செய்து காட்டினார். பிரபல நீரியல் விஞ்ஞானி டாக்டர் சிவா இப்பயிற்சியில் கலந்து கொண்ட தமது ணுனுபவத்தைச் சுவைபட விளக்கினார். எழுத்தாளர் சந்திரன் வீரமுத்து நிகழ்வினை அழகு தமிழில் தொகுத்து வழங்கினார். பாண்டான் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஓங் தீ கியாட், மலேசிய அரசு மகளிர்நலத் துணையமைச்சர் செனட்டர் ஹெங் சீ கீ, மலேசிய இந்தியக் காங்கிரஸ் பினாங்கு மாநிலத் தலைவர் சுப்பையா முதலியோர் மகரிஷியைச் சந்தித்து உலக அமைதி தினத்திற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். பயிற்சி முகாமில் பங்கேற்ற அனைவரும் மிக்க மகிழ்வோடும், உற்சாகத்தோடும் காணப்பட்டனர். மலேசிய உலக சமாதான ஆலய தேசியத் தலைவர் ராமன், சித்தியவான் ஞானாசிரியர் சிவகுரு, முன்னாள் தலைவர்கள் வில்லியம் பூபால ஜோஸப், டாக்டர் சரஸிஜம் நாயர், ஜோகூர் ஞானாசிரியர் சத்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- நமது செய்தியாளர் வி.புருஷோத்தமன்

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »

Page 1 of 15

Pearls of wisdom

Fasting Purifies BODY,Mantras Purified MIND,Guru Upadesam Purifies SOUL

International

Search

PSS

GCSS

PSSMLogo

Facebook Share

Share on facebook

Copyright © Universal Peace Foundation, India 2003