அக அமைதி – என்னை சுற்றி எத்துணை பிரச்சனைகள் இருந்தாலும் நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டேன்
(For English Translation please scroll down)

என் வயது 36, குடும்ப சூழ்நிலைகளால் மிகுந்த மன வேதனை அடைந்திருந்த போது, கடவுள் சங்கல்பமாக என் இளம் வயது தோழியிடம்(UPF-இன் தியான பயிற்சியாளர்) பேசும் வாய்ப்பு கிடைத்தது .
மனதில் இருந்த அத்துணை பாரத்தையும் இறக்கி வைத்தேன் . 23 வருடம் கழித்து அந்த சனிக்கிழமை சுமார் 2.5 மணி நேரத்திற்கு அவளிடம் பேசினேன். என்னமோ தினமும் பேசுவது போல் ஒரு வாஞ்சை.
எல்லாவற்றையும் கேட்டறிந்தாள். அவள் என்னிடம் கேட்டது “உனக்கு இப்பொழுது என்ன வேண்டும்“, என்று,
நான் “என்னை சுற்றி எத்துணை பிரச்சனைகள் இருந்தாலும் நான் அமைதியாக இருக்க வேண்டும்“, என்றேன்!
அவள் சரி என்று கூறிவிட்டு தியானத்தின் மகிமையை உணர்த்தினாள் .உண்மையில் முதலில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை , ஆனால் விஷயம் தெரிந்தவள் என் காயங்களுக்கு மருந்து இருக்கிறது என்று கூறும் போது சற்று புரிந்து கொள்ள தொடங்கினேன் . நம்பவும் தொடங்கினேன் .
முதலில் அவள் சுமதி மேடமின் (UPF சென்னை சபயைச் சேர்ந்த ஞான ஆசிரியர்) நம்பர் கொடுத்து பேச சொல்லி அவர்களிடம் மூன்றாம் கண் திறப்பு உபதேசம் வாங்கி கொள்ள ஏற்பாடு செய்தாள்.
நானும் சரி என்று அவர்களிடம் சென்றேன் , அவர்களும் முதலில் என்னுடன் மெதுவாக பேசி பேசி எனக்குள் ஒரு நம்பிக்கையை வளர்த்தார் .
அவரே ஒரு நல்ல நாளும் கூறி உபதேசம் பெற்று கொள்ள வர சொன்னார் . தியான இடத்திற்கு சென்றேன் என்னை ஒரு இடத்தில் உட்கார செய்தார் . பின்பு நல்ல வாக்கியங்களை கூறி என்னை கண்ணை மூடிக்கொள்ளும்படி கூறிவிட்டு அவர் தனது தவத்தின் பயனாக பெற்ற சக்தியை வைத்து என் புருவத்தின் இடையே அழுத்தினார் .
அப்பொழுது ஏதோ ஒரு பொறி தட்டியது போல் அந்த உணர்வு இப்பொழுது நினைத்தாலும் சிலிர்க்கிறது. பிறகு தியானம் செய்வதற்கு மூக்கின் நுனியை பார்க்க சொன்னார். முதலில் தலை வலி பயங்கரமாக இருந்தது ,பிறகு அதே பயிற்சியைஎன் தோழி மூலம் தினமும் இரவில் செய்ய செய்ய, கொஞ்சம் கொஞ்சமாக தலைவலி குறைய ஆரம்பித்தது .
இப்படியே இரண்டாம் உபதேசமும் மூன்றாம் உபதேசமும் சுமதி மேடமிடமிருந்து பெற்றேன்.
உபதேசம் முன் Vs பின்
- எனக்கு முதலில் கடவுளை வெளியில் தேடாமல் நம்முள் உள்ளடங்கி இருக்கும் ஒரு சக்தியை பார்க்க வைத்தது .
- எந்த ஒரு சூழ்நிலையிலும் மிக எளிதாக பதட்டம் அடையும் நான் , கொஞ்சம் நிதானமாக சிந்திக்க ஆரம்பித்தேன் .
- கண்களை மூடினாலே பிரச்சனைகள் எல்லாம் நினைவுக்கு வந்து தொந்தரவு செய்யும் எனக்கு , ஒரு அமைதி கிடைக்க ஆரம்பித்தது.
- முதலில் என்னை பொறுத்தவரை தியானம் என்பது ஏதோ ஒரு கடவுளை நினைத்து கண்ணை மூடிக்கொண்டு பிரார்த்திப்பது தான். உபதேசத்திற்கு பின்னர் கடவுளின் உருவங்கள் அனைத்தும் சக்தி ஒன்றாகவும் உருவங்கள் வெவ்வேறாகவும் நமக்கு காட்சி அளிக்கின்றன என்றும் , தவிர நாமும் கடவுளின் பிள்ளைகள் தான் அதாவது கடவுள் சக்தியின் ஒரு துளி தான் என்பது புரிய வந்தது. அதன் பயனாக கடவுள் உருவத்தை நினைப்பதை விடுத்து கண்ணை மூடி புருவ மத்தியில் கவனிக்கும் போது , முதலில் பயங்கரமான தலைவலி ஏற்பட்டாலும் பிறகு என்னுள் என்னை பார்க்க வைத்தது. கண்ணை மூடும்போது என்னை அறியாமல் ஒரு வித அமைதிக்குள் நுழைகிறேன் , இத்தனை வருடங்கள் அலைபாய்ந்த மனதிற்கு கடிவாளம் போட்டார் போல் இருந்தது .அதுமட்டுமின்றி தியானத்தில் உட்காரும்போது பிற நினைப்புகள் வந்தாலும் தியானம் செய்ய செய்ய என் கவனம் புருவ மத்தியை விட்டு நகரவில்லை .
- இறுதியாக தியானத்தின் மூலம் ஒரு பேச்சை எப்படி பேச வேண்டும், எப்போது பேச வேண்டும் ,இப்பொழுது இது தேவையான பேச்சா என்றெல்லாம் சிந்திக்க தொடங்கியுள்ளேன் .
எந்த மன அமைதிக்காக இத்தனை வருடங்கள் காத்திருந்தேனோ அதனை எளிதில் எனக்கு காண்பித்த என் தோழிக்கும் சுமதி மேடம்கும் என் இறுதி மூச்சு இருக்கும் வரை நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
இதுவரை என்னுள் நடந்த மாற்றங்களை பகிர்ந்து கொண்டேன் , ஆனால் ஒன்று நிச்சயம் , நமக்கு குருமகானின் அருட்கடாக்ஷம் கிடைத்துவிட்டால் , எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு நான் ஒரு சாட்சி . அவர் அனுக்கிரஹம் இல்லை என்றால் , நான் மனவருத்தத்தை என் தோழியிடம் பகிர்ந்திருக்க மாட்டேன் ,அவள் இதிலிருந்து மீண்டு வரும் யுக்தியும் கூறியிருக்க மாட்டாள் .
குருவாகட்டும், அவர் காண்பிக்கும் கடவுளாகட்டும் நம்மை இந்த உலகில் பார்த்துக்கொண்டும் காப்பாற்றிக்கொண்டும் தான் இருக்கின்றனர். அதை உணர்ந்தவர்கள் எளிதில் தங்கள் மன வருத்தத்திலிருந்து மீள்கின்றனர், உணராதவர்கள் தங்கள் வாழ்வை நொந்து கொள்கின்றனர் .
இப்படிக்கு,
குருமகானால் மீண்டும் உயிர் பெற்ற சிஷ்யை
(English Translation)
Inner Peace – No matter how many problems surround me, I want to remain peaceful is what I asked for!!
I am 36 years old. During a time when I was going through immense mental pain due to family circumstances, by God’s will I got an opportunity to speak with my childhood friend who is a meditation practitioner from UPF.
I poured out the entire burden that was weighing on my mind. After 23 years, on that Saturday, I spoke with her for nearly 2.5 hours. It felt as though we spoke every day—there was a deep sense of closeness. She listened to everything patiently. Then she asked me, “What do you want right now?”
I replied, “No matter how many problems surround me, I want to remain peaceful.” I want inner peace!
She said okay and explained the greatness of meditation. Truly, at first I didn’t understand anything. But when someone who knew the path said there was medicine for my wounds, I slowly began to understand and to believe.
First, she gave me, Chennai Sabai Wisdom Teacher Sumathi Madam’s number and arranged for me to speak with her and receive initiation for opening the third eye. I agreed and went to meet her. She spoke to me gently at first, gradually building trust within me.
She then told me an auspicious day and asked me to come to receive the initiation. I went to the meditation place. She made me sit in one spot. Then, after saying positive affirmations, she asked me to close my eyes and, using the power she had gained through her penance, pressed between my eyebrows. “At that moment, it felt as if a spark had struck, just recalling that sensation even now gives me goosebumps.”
After that, she instructed me to focus on the tip of my nose while meditating. Initially, I had severe headaches. Later, by practicing the same exercise every night as guided by my Friend, the headaches gradually began to reduce.
In this way, I received the second and third initiations from Sumathi Madam.
Before Initiation vs After Initiation:
- Earlier, I searched for God outside. Now, it made me see a power that resides within us.
- I used to become anxious very easily in any situation. Now, I have started to think more calmly.
- Earlier, whenever I closed my eyes, all problems would rush into my mind and trouble me. Now, I have begun to experience peace.
- For me initially, meditation meant closing my eyes and praying to some God. After initiation, I came to understand that all forms of God are one energy, that the forms may differ, and that we too are children of God, meaning, we are a drop of that divine energy. As a result, instead of thinking of God’s form, when I close my eyes and focus between my eyebrows, though I initially experienced intense headaches, later it made me see myself within. When I close my eyes, unknowingly I enter a kind of peace. It felt like placing reins on a mind that had wandered for so many years. Moreover, even if other thoughts arise while sitting in meditation, with continued practice my focus does not drift away from the center of the eyebrows.
- Finally, through meditation, I have started thinking about how to speak, when to speak, and whether what I am about to say is really necessary.
For the peace of mind I had been waiting for all these years, I remain eternally indebted to my dear friend and Sumathi Madam, who showed it to me so simply.
I have shared the changes that have happened within me so far. But one thing is certain: once we receive the grace of the Gurumahaan, anything is possible—and I am living proof of that. If not for his grace, I would not have shared my mental distress with my friend, nor would she have shown me the path to come out of it.
Whether it is the Guru or the God he reveals, they are constantly watching over us and protecting us in this world. Those who realize this easily come out of their mental suffering; those who do not realize it lament their lives.
Yours sincerely,
A disciple who was reborn by the grace of the Gurumahan, Qualified CMA, working as Head of Finance, Chennai Firm

