போரில்லா உலகம் அமைய…….உலக அமைதி தூதுவர் குருமாகான் அவர்கள்

சத்குருவே சரணம்!

அங்கு இங்கு எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளா, பரிபூரண பரஞ்சோதியின் நற்கருணையால், உலக உயிர்கள் அனைத்தும் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று, உலகம் அமைதி அடைய பரிபூரண நல்லாசிகள்

2-10-24 இரவு ஈரான் இஸ்ரேலின் மீது, நேரடியாக போர் தொடுத்துள்ளது. இது இன்று உலகம் முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இஸ்ரேலில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேலை பாதுகாப்பதற்காக, முழு ஒத்துழைப்பைத்  தருவதாக தெரிவித்துள்ளது. இது உலகப் போர் என்ற சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது.

இது உலகுக்கு ஒரு சரியான நகர்வல்ல!! உலகம் இன்று இருக்கும் சூழ்நிலையில் போர்களை தாங்கும் நிலையில் இல்லை. ஏற்கனவே உலகம், நடந்து வந்த போர்களினால், பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புடினிடம், ரஷ்ய-உக்ரைன் குறித்து பேசும்போது, பாரத பிரதமர் மோடி அவர்கள், இது போருக்கான நேரம் அல்ல! இது வளர்ச்சிக்கான நேரம். எனவே போரை தவிர்ப்போம்” என்று வேண்டுகோள் வைத்தார். அதை தொடர்ந்து ரஷ்ய உக்ரைன் போரின் வீரியம் குறைந்துள்ளது.

இஸ்ரேலினால் தாங்கள் இழந்த தலைவர்களுக்குச் செலுத்தப்படும் நன்றிக்கடன் தான் இந்த தாக்குதல்கள் என்று, தனது தாக்குதலுக்கான காரணத்தை ஈரான் குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு கொள்கை நோக்கங்களை அடிப்படையாக வைத்து, ஆட்சி புரிந்து வருகிறது. தங்களது கொள்கைகளுக்கு இசைவாக நடக்கும் நாடுகளுடன் இணக்கமாகவும், தங்களது கொள்கைகளுக்கு மாறாக நடக்கும் நாடுகளுடன் பகைமையும் பாராட்டி வருகிறது.

போர் என்பது தனிப்பட்ட இரு நாட்களின் விருப்பு வெறுப்பு மட்டுமல்ல. போர்களின் மூலம் பஞ்சபூதங்களும் பாதிக்கப்படுகிறது. பஞ்ச பூதங்களின் பாதிப்பினால், உலக உயிர்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. போரினால் மற்றவர்களை விட சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஏற்பட்டும் இழப்பு என்பது மிகவும் அதிகம்.

ஏற்கனவே நடந்த பல போர்களினால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து, எந்த ஒரு நாடும் மீளவில்லை. போரின் விளைவுகள் குறித்து தெரிந்தும, ஏன் நாடுகள் போரில்  ஈடுபடுகின்றனர் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது.

எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும், உணர்ச்சிகளின் வசமாகவே இருந்து முடிவுகள் எடுக்கப்படுகிறது.  முடிவு எடுக்கும் முன், அந்த மனம் “ஒரு நிமிட அமைதி” காத்து, சிந்தித்து, அந்த அமைதியை உணர்ந்து, அதன் மூலம் முடிவுகள் எடுக்கப்படுமாயின், அந்த முடிவுகள் நல்லெண்ணமாக அமையும். போர் ஏற்படும் சூழலையும் மாற்றி அமைத்து விடும்.

அமைதியான சூழலில் எடுக்கப்படும் முடிவுகள் யாரையும் சார்ந்தோ, யாரையும் எதிர்த்தோ இருக்காது. அது தேச நலத்துடன் கூடிய உலக நலத்திற்கான  முடிவாகும்.

மனம் அமைதியடையும் போது, எந்த வித  எதிர்பார்ப்பும் இல்லாமல், சரியான முடிவை எடுக்கும்! யுத்தத்தை ஏற்படுத்துவதும,  தவிர்ப்பதும் ஒரு நிமிட அமைதியில் இருக்கிறது. உலகை  சரி செய்யும் பணி “ஒரு நிமிட அமைதி” கொடுக்கின்றது என்றால், மிகை ஆகாது.

வின் கதிர்கள் வால் நட்சத்திரங்கள் மற்றும் இயற்கையின் பேரிடர்களால் புவி பாதுகாக்கப்பட உள்ளது. மேலும் உயிரினங்களில், ஆறறிவு படைத்த மனிதனைத் தவிர, எந்த ஒரு உயிரினமும் தன் இனத்தை அழிப்பதில்லை. சிந்திப்போம்!  போர்கள் தேவையா என்று. சிந்தித்து, உலக உயிர்கள் அனைத்தையும் பாதுகாப்பது நமது கடமை, என்பது உணர்ந்து, உணர்ந்த நிலைகளில் இணைந்து செயல்படுவோம்!

எனவே உலகத் தலைவர்கள், தாங்கள் எடுத்த, மற்றும் எடுக்கப் போகின்ற, முடிவுகளும், சரியானதா என்பதை உணர, ஒரு நிமிட அமைதி” காத்து, தாங்களும் அமைதி அடைந்த, உலகில் எங்கும் அமைதியும், சந்தோஷமும் நிலவச் செய்ய பரிபூரண நல்லாசிகள்!

Our mission

Promote universal brotherhood by LOVE avoiding conflicts between nations, communities, groups and individuals such that wars are totally faced out of mankind and defense expenditure is decimated.

All Rights Reserved. Universal Peace Foundation.